சிக்கினார் மற்றுமொரு முன்னாள் அமைச்சர்: தொடரும் விசாரணை
முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு (Piyankara Jayaratne) எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழக்குகளானது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள்
இதன்படி, ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலமாக 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு ரூ.128,520 நஷ்டத்தை ஏற்படுத்தியமை, மாஹவெவ வீஹென நிறுவனத்திற்கு ரூ. 360,000 தொகையை செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி அந்த தொகையை இழக்க செய்தமை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை சிலாபத்தில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் ரூ. 494,000 தொகையை வரவு வைக்க தூண்டுவதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியமை என முன்னாள் அமைச்சருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |