வடக்கு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்குத் தாக்கல்!
வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நேற்று குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரின் சுயாதீனமான செயல்பாடுகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல்
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடைகேள் ஆணை மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுய விருப்பத்தின்படி நியதிச் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானியில் பிரசுரித்தமை தொடர்பான, வட மாகாண ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
வடக்கு ஆளுநரின் சுயாதீனமான செயல்பாடு
வட மாகாண சபை இல்லாத கால கட்டத்தில் சட்ட வரம்பை மீறி ஆளுநர் சுயாதீனமாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
வடக்கு ஆளுநரால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியானது செல்லுபடியற்றது என உத்தரவிடக் கோரியே இந்த தடைகேள் ஆணை மனு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)