கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம் : நீதிமன்றில் வழங்கப்பட்ட உறுதிமொழி

Trincomalee Law and Order Department of Archaeology
By Independent Writer Sep 22, 2026 10:56 AM GMT
Courtesy: NICKEY THOMSON

கன்னியா - வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானம் தொடர்பான வழக்கு விசாரணையானது திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது தொல்லியல் திணைக்களத்தினால் எழுத்துமூலமான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி எல்லைகளை மீறி எந்தவொரு புதிய கட்டுமானமும் செய்யப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தாரர்கள் சார்பில் பங்கேற்றிருந்தார்.

வெளியான புதிய அறிவிப்பு - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பு

வெளியான புதிய அறிவிப்பு - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பு

தொல்லியல் திணைக்களத்திற்கு அனுமதி

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் இற்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மற்றொரு இடம் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் அளவீடு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டது.

கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம் : நீதிமன்றில் வழங்கப்பட்ட உறுதிமொழி | Case Regarding Trinco Kanniya Hot Water Springs

அந்த தொல்லியல் அடையாளமாகக் கருதப்படும் இடத்தை பேணிப் பாதுகாப்பதற்கு மட்டுமே தொல்லியல் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அங்கு செங்கற்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் கொண்டுவந்து குவிக்கப்பட்டு குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு புறம்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து வழக்கறிஞர் பிரசாந்தினி உதயகுமார் தரப்பில் மேல் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது.

கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் திணைக்கள நாயகமும் மாவட்டச் செயலாளரும் இது தொடர்பான விளக்கத்தை நீதிமன்றத்திற்கு அளிக்கும் வரை அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 

 நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்டச் செயலாளர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நீண்ட அறிக்கையில், தாங்கள் செய்வது அனைத்தும் பேணிப் பாதுகாக்கும் (Conservation) நடவடிக்கை மட்டுமே என்றும், புதிய கட்டிடங்கள் எதையும் கட்டவில்லை என்றும் உறுதிமொழி அளித்துள்ளனர்

கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம் : நீதிமன்றில் வழங்கப்பட்ட உறுதிமொழி | Case Regarding Trinco Kanniya Hot Water Springs 

பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது சேதமடைந்த அல்லது பழுதடைந்த இடங்களை மட்டுமே மீண்டும் சரிசெய்யும் பணியை மேற்கொள்கிறோமே தவிர புதிய விகாரையோ அல்லது வேறு கட்டிடங்களோ அமைக்கப்படவில்லை என அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எழுத்துமூலமான அறிக்கை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி எல்லைகளை மீறி எந்தவொரு புதிய கட்டுமானமும் செய்யப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வழக்கு தாரர்கள் தரப்பில் இவ்வாறான நிலை இருப்பின் தொடர்ச்சியாக இந்த வழக்கினை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் இன்றையதினம் மன்றில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அரசின் புதிய திட்டம்

அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அரசின் புதிய திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்