இந்த மீனை பிடித்து கொடுத்தால் பணப்பரிசு! வெளியாகியுள்ள முக்கிய தகவல்
தெதுறு ஓயாவில் வேகமாகப் பரவி வரும் “தெதுறு நயா” அல்லது “ராட்சத பாம்புத் தலை” மீன்களைப் பிடிக்கும் போட்டி வரும் 20 ஆம் திகதி நடைபெற உள்ளது.
தெதுறு ஓயாவில் உள்ள நாட்டியா பாலம் அருகே அன்று காலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் வடமேற்கு மாகாண கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பொழுதுபோக்கு மீன்பிடி சங்கம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
போட்டியின் நிபந்தனை
வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாம் பரிசு ரூ. 15,000, மூன்றாம் பரிசு ரூ. 10,000 என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போட்டியின் நிபந்தனைகளில் மீன்பிடிக்க மீன்பிடி தூண்டில்களை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்றும் வலைகள் அல்லது பிற மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ராட்சத பாம்புத் தலை தவிர வேறு எந்த மீன்களும் பிடிக்கப்பட்டால், அந்த மீன்களை மீண்டும் நீர்த்தேக்கத்தில் விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராட்சத பாம்புத் தலை மீனின் விரைவான வளர்ச்சி பூர்வீக மீன்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அந்த மீனை சுற்றுச்சூழலிலிருந்து அகற்றுவதே இந்தப் போட்டியின் நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
