சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் மக்கள்
இலங்கையின் சில்லறைச் சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளைப் பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே 3 வகையான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.
கட்டுப்பாட்டு விலை
இவ்வாறான பின்னணியில், மரதன்கடவல (Marathangadavala) அரிசி வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ். ரணசிங்க (S.S. Ranasinghe) தெரிவித்துள்ளதாவது, “எமது சங்கத்தில் உள்ள வர்த்தகர்களிடம் தேவையான அளவு அரிசி இருந்தாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கேற்ப அரிசியை விற்பனை செய்ய முடியாதென” தெரிவித்துள்ளார்.
எனினும், சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கே.பி.குணரத்ன (K.P. Gunaratne) தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் (Sri Lanka) பாரியளவில் அரிசி விற்பனையில் ஈடுபடும் 05 வர்த்தகர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |