வர்த்தகரின் உயிரை பிரித்த கோர விபத்து - கண்காணிப்பு கருவியில் பதிவான சம்பவம்(படங்கள்)
இன்று (05) பியந்தல, ஜாலியகொட, கஸ்பேவ பிரதேசத்தில் சிவில் பொறியியலாளர் ஓட்டிச் சென்ற கெப் வண்டியொன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த வர்த்தகர் ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காளியம்மஹர பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
பலத்த காயங்கள்
சிவில் பொறியியலாளர் ஓட்டிச் சென்ற கெப் வண்டி கொழும்பிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, பிலியந்தலையிலிருந்து வந்த உந்துருளி சிறிமங்கல தோட்டம் நோக்கிச் கிளை வீதி ஊடாக செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த வர்த்தகரின் தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவில் பொறியியலாளர், கெஸ்பேவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், பிலியந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







