நாட்டின் மின் கட்டணத் திருத்தம் - தொடரும் இழுபறி
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) கூட்டுத் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் (Jayanath Herath) தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை கடந்த (CEB) வெள்ளிக்கிழமை (06) மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பிரேரணை மீதான மக்கள் கருத்துக் கூட்டமே இன்று (09) இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச பிரேரணை தற்போது பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2330 மில்லியன் ரூபா
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த ஆண்டு (2025) முதல் ஆறு மாதங்கள் வரை தற்போதைய மின் கட்டணத்தை திருத்த வேண்டாம் என மின்சாரசபை ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளது.
இந்த முன்மொழிவை ஆய்வு செய்த பின், ஆணைக்குழுவின் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
ஆறு மாதங்களுக்குள் 2330 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டுவதாக சபை மதிப்பிடுவதாகவும், அந்த இலாபத்தின் அடிப்படையில் எதிர்கால விலையை திருத்திக் கொள்ள முடியும் எனவும் சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண திருத்தம்
இந்த ஆண்டு, மூன்றாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சில பிழைகள் காரணமாக, திருத்தம் செய்து அனுப்புவதற்கு மின்சார சபைக்கு வழங்கப்பட்டு, தயார் செய்ய, போதிய கால அவகாசம் கேட்டது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பான முன்மொழிவை ஆணைக்குழுவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
