சீமெந்தின் விலை 300 ரூபாவால் குறைப்பு
Nalin Fernando
By Vanan
சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வர்ணப்பூச்சுகளின் விலை
இதற்கிடையில், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வர்ணப்பூச்சுகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்டுமானத் துறையில் வேலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் குறைக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி