அமெரிக்க பாதுகாப்புத் திட்டம் மீதான சர்ச்சை! ஹோர்முஸ் குறித்து CENTCOM விளக்கம்
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை அமெரிக்கக் கடற்படை மீண்டும் தொடங்கியுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) மறுத்துள்ளது.
சுதந்திரத் திட்டம் என அழைக்கப்படும் அந்த பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் செயல்படுத்தப்படவில்லை என்றும், இதுகுறித்த தகவல்கள் தவறானவை என்றும் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாத தொடக்கத்தில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் தொடங்கியது.
🚫CLAIM: Recent media reporting claims that the U.S. Navy has restarted escorting or assisting commercial vessels during transits through the Strait of Hormuz. FALSE.
— U.S. Central Command (@CENTCOM) May 26, 2026
✅TRUTH: Project Freedom has not resumed, and U.S. forces are not currently escorting commercial vessels through… pic.twitter.com/JD9cY5FUNN
புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
ஈரான் தாக்குதல் நடவடிக்கை
ஆனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், ஈரான் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதுடன், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதால் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இந்த முடிவு பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் கோரிக்கையின் பேரிலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஓமான் கடற்கரைக்கு அருகிலுள்ள கடல் வழித்தடத்தை கடந்து சென்ற இரண்டு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிய கிரேக்க சூப்பர் டேங்கர் கப்பலுக்கு அமெரிக்க கடற்படை இரகசியமாக பாதுகாப்பு வழங்கியதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |