தங்க கையிருப்பிலிருந்து மற்றுமொரு தொகை விற்பனை - குறைவடைந்தது இருப்பு
srilanka
gold
central bank
sale
By Sumithiran
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கை மத்திய வங்கி தனது தங்க கையிருப்பிலிருந்து மற்றுமொரு பகுதியை விற்பனை செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்படி தங்க கையிருப்பில் ஒரு பகுதி ஜனவரியில் விற்கப்பட்டது, டிசம்பரில் $175 மில்லியனாக இருந்த தங்க இருப்பு ஜனவரி இறுதியில் $92 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி கடந்த டிசம்பரில் தனது தங்க இருப்புக்களில் பங்குகளை விற்றதுடன், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் 3.1 தொன் தங்கம் கையிருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரியில் தங்கம் கையிருப்பு விற்பனையுடன், இலங்கையின் தங்க இருப்பு தற்போது 1.6 தொன்னாக சுருங்கியுள்ளது.
