வடக்கு நான்கு பிரதான வைத்தியசாலைகளை மத்திய அரசுக்குள் உள்வாங்க நடவடிக்கை
Kilinochchi
Mannar
Mullaitivu
Vavuniya
By Dharu
மாகாண சபைகளால் நிறுவகிக்கப்படுகின்ற வடக்கின் முக்கிய வைத்தியசாலைகளை மத்திய அரசுக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய வைத்தியசாலைகளை மத்திய அரசுக்குள் உள்வாங்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இவற்றை தேசிய வைத்தியசாலையாக மாற்றினால் மாத்திரமே சிறந்த சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவை மக்களின் கோரிக்கைக்கு அமையவே செயற்படுத்தப்படவுள்ளது எனவும் மாகாண சபைகளுக்கு நிதி வழங்குவதில் ஒரு எல்லை உண்டு எனவும் கூறியுள்ளார்.
இதற்கமைய அவற்றை கருத்தில் கொண்டே இந்த திட்டம் முன்மொமியப்பட்டுள்ளது என ஜனாதிபதி மேலும் விளக்கமளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்