எதிர்காலத்தில் எரிவாயு பெட்ரோலிய தட்டுபாடு நாட்டில் இருக்காது: ஜனாதிபதி உறுதி
2026 வரவு-செலவுத் திட்ட உரையில் பெட்ரோலியம் விலை கோரல்கள் குறித்து ஜனாதிபதி அனுர கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ”இலங்கை பெட்ரோலிய துறையால் மேற்கு கரைக்கு அருகில் அமைந்துள்ள மன்னார் படுகையில் 4 இடங்களில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆய்வுக்கு விலை கோரல்கள் கூறப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு பெப்ரவரி இந்த விலை கோரல்களை திறக்க அரசாங்கம் எதிர்பார்ப்புடன் உள்ளது.
நீண்ட காலமாக நமது நாட்டில் பெட்ரோலியம் சமையல் எரிவாயு தொடர்பில் பாரிய பிரச்சினை இருந்தது. எதிர்காலாத்தில் அப்படி இருக்காது.
நாங்கள் 4 இடங்களை அடையாளம் கண்டு அதன் விலை கோரல்களை கோருவதற்கும் அகழ்வுகளை மேற்கொள்ளவும் யோசனை முன்வைத்துள்ளோம்.
மிக விரைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எதிர்காலத்தில் எரிவாயு பெட்ரோலிய தட்டுபாடு நாட்டில் இருக்காது” எனவும் ஜனாதிபதி அனுர தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |