மோடி தொடர்பில் சர்ச்சைக்குள்ளான கருத்து!! பதவி விலகினார் மின்சார சபை தலைவர்
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவி விலகல் கடிதத்தை எரிசக்தி அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.
எம்.எம்.சி. பெர்டினாண்டோ சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்கோகோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
சர்ச்சைக்குள்ளான கருத்து
எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக அரச தலைவர் தம்மிடம் தெரிவித்ததாக பெர்டினாண்டோ வெளியிட்ட கருத்து கடந்த வாரம் சர்ச்சைக்குள்ளானது.
எவ்வாறாயினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மறுப்பு வெளியிட்டிருந்தார்.
பின்னர் பெர்டினாண்டோ தனது கருத்தை மீளபெற்று மன்னிப்பு கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
