அநுர அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மின்சாரசபை ஊழியர்கள்
Colombo
SL Protest
Ceylon Electricity Board
By Sumithiran
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பில் இன்று (22) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, அதன் ஊழியர்களின் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அடிப்படை உரிமைகளை பறித்துள்ள அரசாங்கம்
உத்தேச மின்சார சபைத் திருத்தச் சட்டத்தைக் கைவிடுமாறும் மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் அரசாங்கமும் மின்சார சபையும் தமது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதுடன், தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கிடையே மின்சார சபை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்