தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி விலகல்
Colombo
Chairman
SriLanka
Coconut Development Authority
Keerthi Sri Weerasinghe
By Chanakyan
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க (Keerthi Sri Weerasinghe) விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், அரச தலைவர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, அவர் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், பதவி விலகல் கடிதத்தை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் அவர் கையளித்துள்ளதாகவும் அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.
