சாமர சம்பத் எம்.பி மீதான விளக்கமறியல் நீடிப்பு
Sri Lanka Magistrate Court
Bribery Commission Sri Lanka
MP Chamara Sampath Dassanayake
By Jaso
மூன்று பொஸ்பேட் இறக்குமதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 8.4 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் மற்றும் முன்னாள் செயலாளர் ஆகியோரை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இன்று (10) 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஆணையம் உண்மைகளை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஆணையத்திற்கு நீதிமன்றின் உத்தரவு
மேலும், சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் அவர்களுக்குச் செய்யப்பட்ட பிணை மனு மீதான அரசுத் தரப்பின் ஆட்சேபனைகளை 17ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஆணையத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி