மொட்டுக் கட்சியின் புதிய தேசிய இணைப்பாளர் நியமனம்!
SLPP
Mahinda Rajapaksa
Sri Lanka
By Harrish
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) புதிய தேசிய இணைப்பாளராக டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதித் தேர்தலின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த ரோஹித அபேகுணவர்தன அந்தப் பதவியில் பணியாற்றினார்.
தேசிய இணைப்பாளர் பதவி
இந்நிலையில், தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய இணைப்பாளராக டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய கிராமிய மற்றும் பிரதேச தலைவர்களை நியமிப்பதற்கான அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்