சுமந்திரனை தூக்கி பிடிக்கும் சாணக்கியன் : சுயநல அரசியலுக்கான கூட்டணியா !
சுமந்திரனை (M. A. Sumanthiran) தூக்கி பிடிப்பதற்காகவா மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சாணக்கியனை தெரிவு செய்தார்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட உறுப்பினர் அன்பின் செல்வேஸ் (Anbin Selves) கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக்காலமாக சாணக்கியன் சுமந்திரனுக்கு ஆதரவாக பிரசராங்களை முன்வைத்து கொண்டியிருக்கின்றார், இவ்வாறு சுமந்திரனை தூக்கி பிடிப்பதற்காகவா மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சாணக்கியனை தெரிவு செய்தனர்.
நடைபெற்ற தேர்தலில் சுமந்திரன் போட்டியிடாமல் இருந்து இருந்தால் நான்கு அல்லது ஐந்து ஆசனங்கள் தமிழரசு கட்சிக்கு வந்திருக்கும் ஆனால் அவர் ஒருவரால் கட்சி கவிழ்க்கப்பட்டது.
சிறீதரன் (Sivagnanam Sritharan) வெற்றி பெற்றமைக்கு காரணமும் தன்னை வெல்ல வைத்தால் தமிழரசு கட்சிக்கு தலைவராவேன் என அவர் முன்வைத்த பிரசார நடவடிக்கையின் மாத்திரம் தான்.
இவ்வாறு இலங்கை வரலாற்றில் தமிழ் கட்சிக்கான பாரிய தோல்விக்கு சுமந்திரன் மீதான வெறுப்பே மிகப்பெரிய காரணம்.
நல்ல வேட்பளார்களை நிறுத்தி இருந்தால் தமிழரசு கட்சி பாரிய வெற்றியை சந்தித்திருக்கும் ஆனால் அவருக்கு சொம்பு தூக்கும் வேட்பாளர்கள் இருக்க மாட்டார்கள் என அங்கு யாரையும் முன்வரவிடவில்லை.
தேசியத்தை பற்றி பேசி தேசிய நீரோட்டத்துடன் வாழுபவர்களை சுமந்திரனுக்கு பிடிக்காது ஆகையால் அவருக்கு சார்பானவர்களுக்கே அங்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
மும்மொழி தெரியும் என்பதற்காக எல்லாம் அவரை பிரசாரம் பண்ணி சுற்றி திரிய இயலாது" என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழரசு கட்சியின் தற்போதைய நிலை, தமிழரசு கட்சியின் தோல்விக்கான காரணம், சாணக்கியன் மற்றும் சுமந்திரனின் கூட்டணி அத்தோடு எதிர்கால தமிழ் அரசியல் குறித்து அவர் விரிவாக தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |