சனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதில் அளிக்க வேண்டும் : அதிபர் கேள்வி..!
ஜேர்மனிய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கோபத்துடன் ரணில் வழங்கிய பதிலானது இலங்கையின் பல்வேறு தரப்பினர் மத்தியில் இன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், சனல் 4 ஊடகத்தை பிரித்தானியாவில் பலரும் கண்டு கொள்வதில்லை. அவ்வாறான ஒரு பின்னணியில் சனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதில் அளிக்க வேண்டும்? என அதிபர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட நேர்காணலில் பதிலளிக்கும் போதே அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குழு
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளை மட்டும் ஏன் கேள்வியாக கேட்கின்றீர்கள்? பல்வேறு வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான் ஒரு குழுவினை நியமித்துள்ளேன்.
நாடாளுமன்ற குழு ஒன்றையும் இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமித்திருக்கின்றேன்.” என்றார்.
இவ்விடயம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ள காணொளியை பார்க்க.