மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படக் காரணம் இதுதான் ; அவதானமாக இருங்கள்!
மனித உடலில் மிகவும் முக்கியமான தொழிற்பாட்டை இதயம் வகிக்கிறது.
இதயமானது ஆரோக்கியமாக சீராக துடித்து கொண்டிருக்கும் வரை நாம் ஆரோக்கியமாக செயற்படலாம்.
இதனால், எமது இதய துடிப்பானது சீராக இருக்க வேண்டியது மிக முக்கியம். சில சமயங்களில் ஏற்படும் சீரற்ற இதய துடிப்பானது எமக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
தூக்கம், உடல் செயல்பாடுகள் மற்றும் மன அழுத்தம் போன்ற சமயங்களில் இதயத் துடிப்பின் செயற்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழமை.
இருப்பினும், மற்ற நேரங்களில், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது அரித்மியா போன்று இருப்பது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம்.
அரித்மியா
அரித்மியா என்பது இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருக்கும் மோசமான சுகாதார நிலைமையை குறிப்பிடலாம்.
சில வகையான அரித்மியாக்கள் பாதிப்புக்களை பாரிய ஏற்படுத்தாது, அதற்கு உடனடி சிகிச்சை தேவையில்லை.
ஆனால், மற்றவை சில அரித்மியாக்கள் திடீர் மாரடைப்பு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
அதனால், உடனடியாக மருத்துவரை நாடி உரிய சிகிச்சைகளை பெற வேண்டியது முக்கியம்.
நீங்கள் எந்த வகையான அரித்மியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், மற்றும் எந்த வகையான சிகிச்சை தேவை என்பதை இருதயநோய் மருத்துவர்களிடம் கட்டாயம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
ஒழுங்கற்ற அல்லது அசாதாரணமான இதயத் துடிப்புகள் என்பது இதயத் துடிப்பின் வேகம் அல்லது சத்தத்தில் ஏற்படும் பிரச்சனையாகும்.
இந்த ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் அரித்மியா என கூறப்படுகிறது.
இதயத் துடிப்பானது மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ இருக்குமானால், அது உயிருக்கு ஆபத்தான நிலையைக் குறிக்கிறது.
இதயத்துடிப்பு
வயதான நபர்களுக்கு சாதாரண இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கும்.
அரித்மியா மயக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிக வியர்வை போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
பிறவி நோய்கள், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றால் அரித்மியா ஏற்படுகிறது.
இருப்பினும், எல்லா சீரற்ற இதயத்துடிப்புகளுக்கும் இதயத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என கூற முடியாது.
உடலை கடுமையாக செயற்படுத்தும் போது, இதயத் துடிப்பு வேகமடைவது வழமையானது.
குறிப்பாக வேகமான நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, எடை அதிகமான பொருளை தூக்குதல் போன்ற செயல்பாடுகளால் இதய துடிப்பு அதிகரிக்கலாம்.
இதேபோல், ஒருவர் ஓய்வெடுக்கும்போது அல்லது தூங்கும்போது, மெதுவாக இதயத் துடிப்பு ஏற்படுவது இயல்பானது.
ஆனால் அடிக்கடி சீரற்ற இதய துடிப்பு ஏற்பட்டால், அது உடலுக்கு போதுமான இரத்தத்தை பம்ப் செய்யவில்லை என்று அர்த்தம் என்பதோடு இது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அரித்மியாவின் வகைகள்
பல்வேறு வகையான அரித்மியாக்கள் ஏற்படுகின்றன. இவற்றை ஈசிஜி அல்லது ஹோல்டர் கண்காணிப்பு போன்ற எளிய நோயறிதல் சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியும்.
இந்த அரித்மியாக்கள் அசாதாரண இதய துடிப்பின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
சில அசாதாரண தாளங்கள் இதயத்தின் மேல் அறைகளில் உருவாகின்றன, இவை சுப்ரா வென்ட்ரிகுலர் அரித்மியாஸ் என்றும், இதயத்தின் கீழ் அறைகளில் தோன்றுபவை வென்ட்ரிகுலர் அரித்மியா என்றும் அழைக்கப்படுகின்றன.
சிகிச்சை
அரித்மியாவை சரியான மருத்துவங்கள் அல்லது அறுவை சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்தலாம்.
உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படவில்லையெனில், அவை இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு பாதிப்பை விளைவிக்கும்.
இது ஒரு அபாயகரமான பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது இதயத் தடுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
மருத்துவ தொழில்நுட்பத்தின் ஊடாக, இதயமுடுக்கிகள் அசாதாரணமாக மெதுவாக இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
எனவே, உங்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்புகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது.
