சனல் 4 புலம்பெயர் தமிழர் ஆதரவு நிறுவனம் என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்
புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவு பெற்ற சனல்-4 ஊடகத்துக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் உண்மையான நோக்கம் இல்லையென சிறிலங்கா நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களை சனல்-4 ஊடகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், குறித்த ஆவணப்பதிவு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்டிருக்கலாம் எனும் தோரணையில் கொழும்பில் இன்று(7) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அசாத் மௌலானா முஸ்லிம் என்பதற்காகவே தனது கைக்கூலியாக வைத்திருந்தார் பிள்ளையான் - எழுந்த புதிய கண்டனம்
சனல்-4 ஊடகம் கடந்த காலங்களில் இருந்தே புலம்பெயர் தமிழர்களுடன் சிறந்த உறவுகளை கொண்டிருந்தது.
ஒரு ஊடகம் தம்மை பிரபலமாக்கிக் கொள்வதற்கு தேவையான விளம்பரத்தை மேற்கொள்ளும்.
அவ்வாறே சனல்-4ம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்பதிவை வெளியிட்டுள்ளது. தற்போது, முழு உலகும் சனல்-4வை பற்றி பேசுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பது இந்த ஊடகத்தின் நோக்கமல்ல.
ஆராய்ச்சிகளும் விசாரணைகளும்
கடந்த காலங்களிலும் குறித்த ஊடகம் இவ்வாறே செயற்பட்டது.
அத்துடன், குறித்த ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவு தொடர்பான ஆராய்ச்சிகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக செயலாளரான கன்சீர் அசாத் மௌலானாவின் பின்னணி குறித்து ஆராயப்பட வேண்டும்.
அவர் புகலிடம் கோரியுள்ளமை தொடர்பிலும் நாம் விசாரணை நடத்த வேண்டும்