இலங்கை இனி மலிவான சுற்றுலாத் தலமாக மாறாது: பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அழைப்பு
Sri Lanka Tourism
India
Tourism
By pavan
பாலிவுட் நட்சத்திரங்கள் இலங்கையில் தங்கள் படகுகளை நிறுத்தி, நாட்டில் உள்ள சலுகைகளை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மலிவான சுற்றுலாத் தலம்
மேலும், இலங்கை இனி மலிவான சுற்றுலாத் தலமாக மாறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிக வெப்ப காற்று பலூன்களை இறக்குமதி செய்யவும், அதிக படகுகளை பெறவும், ஸ்கை டைவிங் பள்ளியை உருவாக்கவும், நாட்டில் உயர்தர சுற்றுலாவை மேம்படுத்த அதிக வசதிகளை உருவாக்கவும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு வருமானம் ஈட்டிட்டித்தருவதில் சுற்றுலாத்துறை முக்கிய வகிபாகம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி