யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு

Sri Lanka Army Jaffna NPP Government chemmani mass graves jaffna
By Thulsi Oct 24, 2026 02:21 AM GMT
Report

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்தார்.

செம்மணியில் மனித புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா வெளியிட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மாற்றும் போர் குற்றங்கள் பல்வேறு கால கட்டங்களில் மேற்கொண்டுள்ளன.

வெடித்த சர்ச்சை: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ!

வெடித்த சர்ச்சை: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ!

இராணுவத்தை காப்பாற்றும் அறிக்கை 

2009 இறுதி யுத்தத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் எமது உறவுகளை இராணுவத்திடம் கையில் ஒப்படைத்த பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது 15 வருடங்களாக தேடி வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறோம் .

யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு | Chemmani Mass Grave Report Issue  

1996 ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைக்குழி திட்டமிட்ட தமிழின அழிப்பின் அடையாளமாக வெளிவந்த நிலையில் தற்போது சுமார் 600 வரையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.

செம்மணி சித்தப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் சர்வதேச விசாரணை கோரி செம்மணியில் போராட்டத்தை நடத்தினோம்.

செம்மணியில் புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் எந்த ஒரு விசாரணையையும் உண்மையையும் நீதியையும் தந்திடாது என பல சந்தர்ப்பங்களில் கூறி வந்தோம்.

தற்போது நாம் தெரிவித்த கருத்து உண்மை என்பதை ராஜ் சோமதேவாவினால் வெளியிடப்பட்ட செம்மணி இடைக்கால அறிக்கை இலங்கை அரசையும் இராணுவத்தையும் காப்பாற்றும் அறிக்கையாக வடிவமைத்துள்ளார்.

சர்வதேச விசாரணை

செம்மணி அகழ்வு இடம்பெற ஆரம்பித்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாமும் சிவில் அமைப்புகளும் எம்மோடு இணைந்து பயணிக்கின்ற தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் சர்வதேச விசாரணை வேண்டுமென கேட்டோம் இலங்கை அரசு மறுத்துவிட்டது.

யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு | Chemmani Mass Grave Report Issue

அவர்களுக்கு நன்கு தெரியும் சர்வதேச விசாரணையோ அல்லது சர்வதேச நிபுணர்களை அழைத்தால் உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும் அதன் காரணமாகவே தம்மை திருப்தி படுத்தக்கூடிய தொல்லியல் ஆய்வாளரை நியமித்தார்கள்.

ராஜ் சோமதேவா பௌத்த சிங்கள பேரினவாதத்தின் ஒரு கைக்கூலியாக செயற்பட்டு உள்ளமை சுமார் 170 பக்கங்களைக் கொண்ட இடைக்கால அறிக்கை தெளிவாக காட்டுகிறது. அவர் அந்த அறிக்கையில் கூறுகிறார் செம்மணியில் புதைக்கப்பட்ட எமது உறவுகள் தொற்றுநோய் அல்லது இயற்கை அனத்தத்தினால் உயிரிழந்திருக்கலாம் என கூறி இருப்பது சிங்கள பேரினவாதத்தை திருப்தி படுத்தும் செயற்பாடாக பார்க்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் இயற்கை அர்த்தம் அல்லது தொற்று நோயால் இறந்தவர்களை புதைத்துள்ளார்கள் என்றால் இவ்வளவு பாரிய தொகை எந்த காலகட்டத்தில் இறப்பு ஏற்பட்டது என்பதை கூற மறுத்ததன் நோக்கம் என்ன.

இந்து முறைப்படி தகனம் மேற்கொள்ளும் செம்மணி சிந்துபாத்தியில் எவ்வாறு மனித எலும்புக்கூடுகள் குவியல் குவியலாக சுமார் இரண்டு மூன்று அடி குழிகளில் புதைக்கப்பட முடியும்.

புத்தகப் பையுடன் சிறுவர்களின் உடல்கள்

அவர் கூறுவது போன்று மனித உடல்கள் புதைக்கப்பட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் இறந்த உடல்களை குவியல்களாக ஆடைகள் அணியாமல் குழிகளில் புதைக்க மாட்டார்கள் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு | Chemmani Mass Grave Report Issue

அது மட்டுமல்லாது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வழங்கிய புத்தகப் பையுடன் சிறுவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டமை ஆதாரங்களுடன் வெளிவந்த நிலையில் அது தொடர்பில் ராஜ் சோமதோவா மௌனம் காத்துள்ளார்.

யுத்த காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியாக இருந்த செம்மணி சூனியப் பகுதியினை தனது அறிக்கையில் குறிப்பிடாம் இராணுவத்தை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் மேலும் செம்மணியில் வெளிவந்த மனித எச்சங்கள் என்பத் தொகுதிகள் முறிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளாக வெளிவந்தமை புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் செம்மணியில் அகழ்வுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோம தேவா இலங்கை அரசின் கைக்கூலியாக தமிழின அழிப்பை மூடி மறைக்கும் செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கையில் நீதி மறுக்கப்பட்ட நீதி சர்வதேச நீதியே தமிழ் மக்களுக்கான நீதி என்பதில் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்ட அம்மாக்களும் தெளிவாக உள்ள நிலையில் செம்மணி தொடர்பில் ஐநா விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச நாடுகளும் தூதரகங்களும் அழுத்தங்களை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

மைத்திரியின் தவறால் சிறையில் வாடும் ஞானசார தேரர் - சபையில் சாடும் மொட்டு எம்பி

மைத்திரியின் தவறால் சிறையில் வாடும் ஞானசார தேரர் - சபையில் சாடும் மொட்டு எம்பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024