ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்தனர் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில்(afghanistan), சதுரங்கம்(chess) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும், தாலிபான்(taliban) அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இது குறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில்,
சூதாட்டத்தின் ஒரு வடிவமே சதுரங்கம்
“இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. “இது நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது.
மத ரீதியான ஆட்சேபனைகள்
சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன. “மத அறிஞர்கள் விளையாட்டு இஸ்லாமிய கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை தீர்மானிக்கும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும்" என்று கூறினார்.
இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
