முகத்தில் சிறுநீர் கழிப்பு -பழங்குடி இளைஞரின் காலை கழுவிய முதலமைச்சர்
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் நபரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கழுவி பிராயச்சித்தம் தேடியுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினரான கேதார்நாத் சுக்லாவின் நெருங்கிய நண்பரான பர்வேஷ் சுக்லா, 3 மாதங்களுக்கு முன் நடந்ததாக தெரிவிக்கப்படும் பழங்குடியின தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இளைஞர் மீது சிறுநீர் கழித்த காணொளி
A political leader from India's ruling party, BJP, publicly urinates on the face of a tribal community member in Bhopal.
— Mansoor Kochukadavu (@MansoorBhimArmy) July 4, 2023
Welcome to the Hindutwa Nation pic.twitter.com/IKI94DJDiV
வாயில் சிகரெட் புகைத்தபடி, இளைஞர் மீது சிறுநீர் கழித்த காணொளி இணையத்தில் வெளியானது.
பழங்குடியினருக்கு இத்தகைய கொடுமை நடந்துள்ளது என்பதை அறிந்த உடனேயே கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டிருந்தார்.
முதலமைச்சரின் உத்தரவுப்படியே இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த சுக்லா நேற்று கைது செய்யப்பட்டதோடு அவர் சட்டவிரோதமாக கட்டியதாக தெரிவிக்கப்படும் வீடும் இடிக்கப்பட்டது.
அவமதிக்கப்பட்ட இளைஞரின் கால்களை கழுவிய முதலமைச்சர்
यह वीडियो मैं आपके साथ इसलिए साझा कर रहा हूँ कि सब समझ लें कि मध्यप्रदेश में शिवराज सिंह चौहान है, तो जनता भगवान है।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 6, 2023
किसी के साथ भी अत्याचार बर्दाश्त नहीं किया जायेगा। राज्य के हर नागरिक का सम्मान मेरा सम्मान है। pic.twitter.com/vCuniVJyP0
இந்த பின்னணியில் பாதிக்கப்பட்ட இளைஞர் தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், இளைஞரிடம் மன்னிப்பு கோரினார். மேலும் அவமதிக்கப்பட்ட இளைஞரின் கால்களை கழுவி, அவருக்கு பொட்டு வைத்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து இளைஞருக்கு ஆறுதல் கூறி, பரிசுப்பொருட்கள் வழங்கி சமாதானம் செய்தார்.
பழங்குடியினருக்கு எந்தவொரு கொடுமையும் நடக்கக்கூடாது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு உதாரணமாக விளங்க வேண்டும் என்ற வகையிலேயே மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வு குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்