15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞன் கைது!
Mullaitivu
Sri Lanka Police Investigation
Child Abuse
By pavan
முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய திருகோணமலையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலை காரணமாக முல்லைத்தீவிற்கு வந்த இளைஞன் குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இது தொடர்பில் அயலவர்களால் முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி