ட்ரம்ப் விடுத்த மிரட்டல்: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!
டிஜிட்டல் சேவை வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 'கூடுதல் வரிகள்' விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை அவர் நேற்று வெள்ளைமாளிகையில் இருந்த விடுத்துள்ளார்.
அதன்படி, டிஜிட்டல் சேவை வரி விதிப்பு சட்டங்கள் நீக்கப்படாவிட்டால், அபராதங்கள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஆபத்து
வரிகளை விதிப்பதன் மூலம் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நிற்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
டிஜிட்டல் வரிகள், டிஜிட்டல் சேவை சட்டங்கள் மற்றும் டிஜிட்டல் சந்தை விதிமுறைகள் அனைத்தும் அமெரிக்க தொழில்நுட்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பாகுபாடு காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், டிஜிட்டல் சேவை வரிகளை விதிக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

