பாலூட்டும் போத்தல் அருகே குழந்தையின் எலும்புகள்: அதிரவைக்கும் செம்மணி
யாழ் (Jaffna) செம்மணியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணியில் மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குறித்த என்புத்தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி என்புத்தொகுதி நேற்றைய தினம் (25) அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழி
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.
அந்தப் பகுதி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் ஒன்றும் மற்றும் வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.
இந்தநிலையில், அந்தப் பகுதியில் இருந்து குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
