விளையாடிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்
புத்தளத்தில்(Puttalam) கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து ஒரு மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் நேற்று(06.03.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,“நேற்று(06) மாலை குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை என்பதுடன் அவரது தாயார் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நிலையில் குழந்தையின் மூத்த சகோதரி மற்றும் சகோதரர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதன்போது, சுமார் 10 நிமிடங்களில் வீடு திரும்பிய தாயார், தனது மகள் மற்ற குழந்தைகளுடன் இல்லை என்றும், கழிப்பறைக்காக வெட்டிய குழியில் விழுந்து, அதில் நிரம்பியிருந்த தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குழந்தையை மீட்டு, அண்டைய வீட்டாரின் உதவியுடன் உடனடியாக கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்