இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு...! வெளியான அறிவிப்பு
இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை மின்சார சபை உருமாற்றப் பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஹேடிகல்ல தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கை மின்சார சபையைக் கலைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பெப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் பணிகள்
இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் அவற்றில் நான்கு கட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அடிப்படை ஒதுக்கீட்டுத் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்ட கால மின் உற்பத்தித் திட்டம் மற்றும் நீண்ட கால மின் விநியோக மேம்பாட்டுத் திட்டம் ஆகிய கட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், அவை பெப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |