சிறுவர் கடத்தல் பீதி - வியாபாரத்துக்கு வந்த வாகனத்தை அடித்து நொறுக்கிய மக்கள் (படங்கள்)
Sri Lanka Police
Kilinochchi
Sonnalum Kuttram
By Vanan
கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் சிறுவர் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனும் சந்தேகத்தில் வியாபாரத்துக்கு வந்த வாகனம் ஒன்றை கிராம மக்கள் இணைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
அத்தோடு வாகனத்தில் வந்த இருவரையும் தாக்கியதில் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிறுவர் கடத்தல் விவகாரம்
(CWUW2)
வடக்கில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என சிறுவர்களை கடத்தும் செய்திகள் இன்று பேசுபொருளாக உள்ள நிலையில், சந்தேகம் கொண்ட கிராமத்தவர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வியாபாரத்துக்கு என வாகனத்தில் வந்த இருவரும் சகோதர மொழியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கூறும் மொழி புரியாமல் மக்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி