இலங்கையில் குழந்தைகளின் நிறை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
Children's Day
Sri Lanka
Healthy Food Recipes
By Sumithiran
நிறை குறைந்த குழந்தைகள்
இலங்கையில் எதிர்காலத்தில் குழந்தைகள் நிறை குறைந்தவர்களாக இருக்கலாம் என்பதை எதிர்பார்க்கலாம் என குடும்ப நல சுகாதாரத்துறை தலைவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அதிக எடை குறைந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுகாதார மற்றும் வைத்திய அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக போஷாக்கு நிபுணர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நிறை
கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நிறை சுட்டெண் பிரகாரம் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரை 18.5 வீதமான தாய்மார்கள் 15.2 வீதத்திற்கும் குறைவானவர்களாகவும் 15.2 வீதமானவர்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையை பூர்த்தி செய்யாத தாய்மார்களாகவும் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி