நள்ளிரவு வேளை மற்றுமொரு பேருந்து விபத்து : பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்
Sri Lanka Police Investigation
Accident
Srilanka Bus
By Sumithiran
கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் அரச பேருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்த துயரம் ஆற முன்னர் மற்றுமொரு பேருந்து விபத்து தொடர்பில் தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதன்படி வெசாக் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து வீதியை விட்டு விலகி விபத்து
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்றிரவு(12) அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி