யாழில் உயிரிழந்த சிறுவனின் உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே முரண்பாடு
அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்னு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனுக்கு இறுதிக்கிரியை நடைபெற்று வரும் நிலையில் அவரின் மரணத்துக்கு நீதிகோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
குறித்த காணொளியில் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதுடன் சிறுவனின் தாய் கேள்வி எழுப்பிய நிலையில் மண் அள்ளி ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே அங்கு வருகைத்தந்த காவல்துறைக்கும் சிறுவனின் குடும்பத்தினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவனின் மரணத்துக்கு நீதி வேண்டும் என கோரி காவல்துறையின் வாகனத்தை மறைத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் அங்கு பதற்றமான நிலையும் உறுவாகியுள்ளது.









| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |