அநுர, ரணில் மற்றும் மைத்திரிக்கு உடனடி அறிக்கை! உயர் நீதிமன்றின் உத்தரவு
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் விருப்பப்படி அறுவை சிகிச்சை மூலம் தங்கள் பாலியல் அடையாளத்தை மாற்றிக்கொள்ள உதவும் முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னர் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு அறிக்கை
இந்த மனுவை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜெயதிலகே என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, மனுவை தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நேற்று பரிசீலித்ததுள்ளது.
அதன்படி, மனு ஜூலை 20 ஆம் திகதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து, ஒரு வாரத்திற்குள் பிரதிவாதிகளுக்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு மூன்று பேர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |