அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம்
அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஹோர்முஸ் நீரிணை
அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கப் போவது யார்? என்பது குறித்த அதிகார மோதலும் நீடித்து வருகிறது.

ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பு
இந்த நிலையில், ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ வீரர்களை பெண்கள் பிடித்து கொடுத்தால், இந்தத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானியை மீட்பதற்கான அவசரகால நடவடிக்கையைத் தவிர, ஈரானில் எந்த அமெரிக்கப்படைகளும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |