கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (05) இரவு மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் வைத்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த நபர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |