முல்லைத்தீவு இளைஞர் சேவை அலுவலகம் இடமாற்றம்...! வெடித்த சர்ச்சை

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Oct 06, 2026 02:00 AM GMT
Report
Courtesy: Thavaseelan shanmugam

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்டக் காரியாலயத்தை, ஒட்டுசுட்டானில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டிடத்திற்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்களுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது.

இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனது பணிகளை ஆரம்பித்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தனக்கான ஒரு இடம் இல்லாமையால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கட்டடத்தின் ஒரு அறையில் தனது பணிகளை ஆரம்பித்தது.

யாழில் கொடூரம்! பெண்ணைக் குத்திக் கொன்றுவிட்டுத் தொடருந்து முன் பாய்ந்த இளைஞர்

யாழில் கொடூரம்! பெண்ணைக் குத்திக் கொன்றுவிட்டுத் தொடருந்து முன் பாய்ந்த இளைஞர்

மாவட்ட அலுவலகம் 

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கான மாவட்டக் காரியாலயத்தை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டபோது மாவட்டத்தின் அனைத்து பிரதேச இளைஞர்களின் நலனையும் போக்குவரத்து வசதிகள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அனைத்து இளைஞர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரதும் ஒருங்கிணைந்த முடிவாக வடமாகாணத்தின் மையமாகவுள்ள மாங்குளம் நகரில் மாவட்ட அலுவலகம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில் அப்போது தேசிய இளைஞளர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் தற்போதைய தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாணப் பணிப்பாளருமான கே டி சி காமினி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் உதவிப்பணிப்பாளர் சிசிற செனவிரத்ன மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாணப் பணிப்பாளரான விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் ஆகியோரின் முயற்ச்சியில் 2012 ஆம் ஆண்டு மாங்குளத்தில் ஒரு காணி பெறப்பட்டு காணி தூய்மைப்படுத்தப்பட்டு அதற்கான வேலிகள் அமைத்து அறுக்கைப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு இளைஞர் சேவை அலுவலகம் இடமாற்றம்...! வெடித்த சர்ச்சை | Nysc Mullaitivu Office Relocation Sparks Anger

இதைனைத் தொடர்ந்து கட்டிடம் அமைப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டதோடு மாங்குளத்தில் வாடகை வீடு ஒன்றில் முல்லைத்தீவு மாவட்டக்காரியாலயம் இயங்க ஆரம்பித்தது.

அது இன்றுவரை மாங்குளத்தில் வாடகை வீட்டில் இயங்கி வருகிறது.

அன்று முதல் இன்று வரை மாறி மாறி வந்த உதவிப்பணிப்பாளர்களது அக்கறையற்ற தன்மையால் இதுவரை மாவட்டக் காரியாலயத்துக்கென கட்டிடமொன்றை அமைக்கமுடியாமல் போயுள்ளது.

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச...!

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச...!

மாவட்டக் காரியாலயம்

இவ்வாறான பின்னணியில் இன்றுவரை வாடகை கட்டிடங்களில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்டக் காரியாலயம் இயங்கி வருகிறது.

ஆனால் திறனற்ற ஒரு நிர்வாக நடவடிக்கையால் தற்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்டக்நகாரியாலயத்தை ஒட்டுசுட்டானில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டிடத்துக்கு கொண்டுசெல்லும் முயற்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.

முல்லைத்தீவு இளைஞர் சேவை அலுவலகம் இடமாற்றம்...! வெடித்த சர்ச்சை | Nysc Mullaitivu Office Relocation Sparks Anger

இந்த செயற்ப்பாடு காரணமாக குறிப்பாக போக்குவரத்து இடர்பாடுகளுள்ள மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவு இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படவுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்துக்கு வடக்கு மாகாண அலுவலகங்களையே கொண்டுவருமாறு கோருகின்ற நிலையில் இளைஞர்களுக்கு பொருத்தமற்ற வகையில் மாங்குளத்தில் ஏ 9 வீதியோரத்தில் உள்ள வழங்கப்பட்ட காணியில் ஒரு கட்டிடத்தை அமைக்க முயற்ச்சி எடுக்கப்படாது.

இதனை ஒட்டுசுட்டானில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தில் இயக்குவதற்கு முயற்சிப்பது இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

போரைப் பயன்படுத்தி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ட்ரம்பைக் கண்டித்த செனட்டர்

போரைப் பயன்படுத்தி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ட்ரம்பைக் கண்டித்த செனட்டர்

இளைஞர் சேவைகள் 

குறிப்பாக இந்த காணியை பொற்றுக்கொள்ள உழைத்த 2012 காலப்பகுதியில் தேசிய இளைஞளர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் தற்போதைய தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாணப் பணிப்பாளருமான கே டி சி காமினி மற்றும் தற்போதைய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் உள்ளிட்டகுழுவினர் ஒட்டுசுட்டானில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தினை பார்வையிட்டுள்ளனர்.

ஆகவே இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு மாங்குளம் நகரில் உள்ள காணியில் புதிய கட்டடம் ஒன்றை அமைத்து இளைஞர்களின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர பொருத்தமற்ற இடத்துக்கு இந்த அலுவலகத்தை மாற்றக் கூடாது என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு இளைஞர் சேவை அலுவலகம் இடமாற்றம்...! வெடித்த சர்ச்சை | Nysc Mullaitivu Office Relocation Sparks Anger

அத்தோடு வடமாகாணத்தின் மையமாகவும் மாவட்டத்தின் மையமாக உள்ள மாங்குளத்தில் உள்ள காணியில் கட்டிடம் அமைத்து உதவ இவர்கள் முன்வர வேண்டுமென மாங்குளம் பிரதேச மக்கள் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறுகிய நோக்கங்களுக்காக இதனை ஒட்டுசுட்டானுக்கு மாற்ற வேண்டாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் இல்லையெனில் மாங்குளத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடங்கள் உண்டு புதிய கட்டிடம் அமைக்கும் வரை அங்கு தற்காலிகமாக இயங்கமுடியும் என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோஹாவிற்கு விரைந்தார் ஈரானிய அமைச்சர்...! போரை நிறுத்த தீவிர முயற்சி

டோஹாவிற்கு விரைந்தார் ஈரானிய அமைச்சர்...! போரை நிறுத்த தீவிர முயற்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022