பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் மீண்டும் விசாரணை...! அரசாங்கத்தின் நடவடிக்கை
பட்டலந்த தடுப்பு முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் மீண்டுமொரு விசாரணையை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன் பிரகாரம் பட்டலந்த சித்திரவதை முகாமில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தற்போதைக்கு சட்டமா அதிபர் தனது அவதானிப்புகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அவதானிப்புகளும் கண்காணிப்பு அறிக்கைகளும் சட்டமா அதிபரினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பூர்வ விசாரணைகள்
எனினும் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் சாட்சியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக நேரடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்காரணமாக முறையான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு மேலதிக சட்டப்பூர்வ விசாரணைகள் அவசியமாகின்றன எனவும் சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |