யாழில் தலையில் சுட்டு 17 வயது சிறுவன் பலி..! மர்ம பின்னணி - உறவினரின் அதிர்ச்சி வாக்குமூலம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Independent Writer Feb 12, 2026 01:46 AM GMT
Report

ஒரே ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன்போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார் என அல்லைப்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் (Jaffna) - அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழில் நேராக சிறுவனின் மூளையை துளைத்த தோட்டா - விரையும் மனித உரிமை ஆணைக்குழு

யாழில் நேராக சிறுவனின் மூளையை துளைத்த தோட்டா - விரையும் மனித உரிமை ஆணைக்குழு

காவல்துறையினர் மறித்த போது

அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த அவர்கள், இதேவேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாகக் கொள்வனவு செய்ததாகவும் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்குபடுத்தி தருவதாகக் கூறியமையால் அவரை ஏற்றச் சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்தனர்.

யாழில் தலையில் சுட்டு 17 வயது சிறுவன் பலி..! மர்ம பின்னணி - உறவினரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Hrcsl Inquiry Regs Jaffna Police Gun Shooting

உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை செலுத்தினார் என்றும் தீவுப் பகுதி வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கியதாகவும் அந்தவேளை அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினர் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார் என உயிரிழந்தவரின் சிறிய தந்தை தெரிவித்தார்.

அந்த வேளையில், மண்டைதீவு காவல்துறை காவலரணில் நின்ற காவல்துறையினர் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த காவல்துறையினர் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

17 வயது ஆவணமும் - 19 வயது அறிக்கையும்! அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் எது உண்மை!

17 வயது ஆவணமும் - 19 வயது அறிக்கையும்! அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் எது உண்மை!

வாகனத்துக்கு விழுந்த துப்பாக்கி சூடுகள்

ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார்.

யாழில் தலையில் சுட்டு 17 வயது சிறுவன் பலி..! மர்ம பின்னணி - உறவினரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Hrcsl Inquiry Regs Jaffna Police Gun Shooting

பின்னர் காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எம்மை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.

வாகனத்தில் இருந்த சாணம், கயிறு, வாள், வாகனத்துக்கு விழுந்த துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என்றும் கூறினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022