100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு

Nuwara Eliya Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka
By Independent Writer May 13, 2025 05:22 AM GMT
Report

புதிய இணைப்பு

ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் விசேட விசாராணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் நான்கு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நான்காம் இணைப்பு

விபத்துக்குள்ளான பேருந்தினை மிகவும் அனுபவம் வாய்ந்த சாரதி ஒருவரே செலுத்தியதாக பேருந்திற்கு சொந்தமான கதிர்காமம் டிப்போவின் முகாமையாளர் துசித சமிந்த தெரிவித்துள்ளார்.

பேருந்து விபத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட தூர சேவை பேருந்துகள், முறையாக கட்டமைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இயக்கப்படுகின்றன. 

மேலும், இந்தப் பயணத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த சாரதி ஒருவரே நியமிக்கப்பட்டிருந்தார். அவர் மாலை 4 மணிக்கு சரியான நேரத்தில் வேலைக்கு வந்து இரவு 10.00 மணிக்கு வேலையைத் தொடங்குவார். "பகலில் வேலை இல்லை." என டிப்போவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் இணைப்பு  

நுவரெலியா - கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை இரவு பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு | Death Toll In Gerandi Ella Bus Accident

இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.

இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.


மீட்பு பிரிவினருக்கும் நன்றி

இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு | Death Toll In Gerandi Ella Bus Accident

இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி.

நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம்

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம்

பேருந்து விபத்து

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பேருந்து விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு | Death Toll In Gerandi Ella Bus Accident

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதோடு, இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கோர விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம் - வைரலாகும் புகைப்படம்

கோர விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம் - வைரலாகும் புகைப்படம்

மேலதிக நடவடிக்கை

"Clean SriLanka" திட்டத்தின் கீழ் இதற்காக ஒரு திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (11) காலை நடந்த இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளை தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதார பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடித்தனம் - கைது செய்யப்பட்ட விவசாயிகள் : ரவிகரன் எம்பி விசனம்

குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடித்தனம் - கைது செய்யப்பட்ட விவசாயிகள் : ரவிகரன் எம்பி விசனம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020