நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்ற வளாகத்திற்கு தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்தோகோரலாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலவே அவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னணியல் தற்போதைய அமைச்சர்கள்
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மரிக்கார், “அரகலய காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்தோகோரலாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

இருப்பினும், நாடாளுமன்ற வளாகத்திற்கு தீ வைக்க முயன்றவர்களுக்கும் அதே தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தனர்,” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |