சோமாலியாவில் திடீரென வெடித்த மர்மபொருள் - ஒரே நேரத்தில் 27 பேர் பலி
By pavan
சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு சோமாலியா, கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர்.
அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
காவல்துறையினர் விசாரணை
இந்த கோர சம்பவத்தில் பெரும்பாலான சிறுவர்கள் உள்பட 27 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்