சீனாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: 26 பேர் பலி - 63 பேர் படுகாயம்
சீனாவிலுள்ள அலுவலகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தீ விபத்தானது, சாங்சி(Shanxi) மாகாணத்தின் Luliang நகரிலுள்ள நான்கு மாடி கட்டடத்தில் நேற்றைய தினம் 7 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம்
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு விபத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
சீனாவில் தொழில்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைள் கடைப்பிடிக்காமையே இவ்வாறு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்துறைகளில் நடைபெறும் அபாயங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சீன அதிபர் ஜிங்பிங்(Xi Jinping) தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |