ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு எதிராக கொந்தளித்த சீனா
பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளியுறவுத்துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும்.
அணு ஆயுதங்கள்
அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டேன் என்ற தன் நீண்டகால கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது.

எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை முதலில் சீனா பயன்படுத்தப் போவதில்லை என்பதை இதன் வாயிலாக உறுதியளிக்கின்றோம்.
தற்காப்பு
சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது, மேலும் அணு ஆயுத சோதனைகளுக்காக தானாக விதித்துக்கொண்ட தடையை பின்பற்றி வருகின்றது.

இதேபோன்று, உலகளாவிய அணு ஆயுத சோதனைகள் மீதான தடையையும் மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்பு முறையையும் பாதுகாப்பதற்கான அதன் உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்