அமெரிக்காவை ஒட்டுக்கேட்டும் சீனா - கைகொடுத்த மற்றுமொரு நாடு..!
United States of America
China
By Kiruththikan
தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும் மின்னணு தகவல் தொடர்புகளை சீனா ஒட்டுக்கேட்க கியூபா அனுமதித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் அத்து மீறி நுழைந்த சீனாவின் உளவு பலூனை சுட்டு விழுத்தியது.
இந்த நிலையில் தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும் மின்னணு தகவல் தொடர்புகளை சீனர்கள் ஒட்டு கேட்க அனுமதிக்க கண்காணிப்பு வசதியை கியூபா அனுமதித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவும் கியூபாவும் ஒப்பந்தம்
கொள்கை அளவில் சீனாவும் கியூபாவும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்கு இடையே அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்