சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக நட்டை வந்தடைந்துள்ளார்
இவர் இன்று (12.01.2026) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
சீனாவிற்கு சொந்தமான பீஜிங் விமான சேவையின் விசேட விமானம் ஊடாக அவர்கள் இவ்வாறு வருகை தந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென்ஹொன்க் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
புதிய பொருளாதார ஒத்துழைப்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை – சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏனைய மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு முயற்சிகள் போன்ற பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மூத்த அரச தலைவர்கள், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரவிக்கப்படுகின்றது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |