சீனாவில் இருந்து வந்த செய்தி!! நன்றி தெரிவித்தார் கோட்டாபய
சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
இந்தச் செய்தியை சீனத் தூதுவர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கியிருந்தார்.
சீனத் தூதுவர் Qi Zhenhong, ஜூன் 16ஆம் திகதி வியாழக்கிழமை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்ததாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவுள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து அரச தலைவருக்கு சீனத் தூதுவ இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இன்று தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சீன அரச தலைவருக்கு கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you President Xi Jinping for the warm birthday wishes. Along with all of #lka I also want to thank #China for her continued friendship, particularly during these trying times. May the ties between our two nations grow from strength to strength. @ChinaEmbSL pic.twitter.com/NJ0aB7jGiY
— Gotabaya Rajapaksa (@GotabayaR) June 20, 2022

