இலங்கைக்கு சாதகமாக சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயார்..! சீனா அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government of China
China
By Kiruththikan
ஆதரவு
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா
இலங்கைக்கு சாதகமாக உதவுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

