ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் வெடித்தது சர்ச்சை
மாலைதீவின் தற்போதைய சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொகமட் நசீட்டை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நஷீத் மீதான தாக்குதலைக் கண்டித்து ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டன அறிக்கையில், அவரது பெயரை “முகமது அப்துல்லா நஷீத்” என்று அமைச்சின் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
நஷீத்தின் குடும்ப ஆதாரங்களும் அவரது அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்றில் பணிபுரிந்தவர்களும் நஷீத்துக்கு நடுத்தர பெயர் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். “அவர் அன்பாக‘ அன்னி ’என்று அழைக்கப்பட்டார்.,
எனினும்அவருக்கு ஒரு நடுத்தர பெயர் இல்லை”,என மாலைதீவின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. மாலைதீவின் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அவரது உத்தியோகபூர்வ சுயசரிதையிலும் எந்த நடுத்தர பெயரையும் குறிப்பிடவில்லை, அவர் மாலைதீவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆவார்.


